யாழ்பாணத்திற்கு தேவையான முதற்கட்ட யூரியா உரங்கள் வந்தடைந்தன.

சாவகச்சேரி நிருபர்
யாழ் மாவட்டத்தில் 2022/23 ஆம் ஆண்டு காலபோக நெற் செய்கைக்கான முதற்கட்ட யூரியா உரங்கள் 16/08 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன.
இவ்வாறு 4கொள்கலன்களில் வந்த 200தொன் யூரியா உரத்தினை பாராளுமன்ற உறுப்பினரும்-யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கையேற்று கோண்டாவில் உரக் களஞ்சியத்தில் வைத்து கமநல சேவை நிலைய அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.
இம்முறை யாழில் காலபோக நெற்செய்கைக்கு 1300தொன் யூரியா தேவைப்பாடாக உள்ள நிலையில் மிகுதி உரங்கள் விரைவில் கமநலசேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தொலைபேசி வாயிலாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை தொடர்பு கொண்டு யாழ் மாவட்ட விவசாயிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்ததுடன்-யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மரக்கறி செய்கைக்கான உரங்களை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.