இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு இந்த உதவிகளை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த மனிதாபிமான உதவியின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கும் உதவித் தொகை 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்