சைக்கிளின் பிரேக் பிடிக்காததால் பாடசாலை மாணவன் பலி

திக்வெல்ல உடதெனிய பிரதேசத்தில் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு மாணவர்கள் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னால் பயணித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல, கொண்டெனிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய பாடசாலை மாணவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் நடத்திய விசாரணையில் சைக்கிளின் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்