பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த நூற்றுக்கு மேற்பட்ட விதவைகள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், தோட்ட நல அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இதற்காக பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டு திட்டச் செயலாளர் எஸ்.பாலசிங்கம் அவர்களின் தலைமையில் மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்குரிய நிதி அனுசரணை செய்துவருகின்றனர். இதனை நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம்  மற்றும் ப்ரண்ஷிப் பௌண்டஷன் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.