யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களினை
உள்ளூர் மற்றும் சர்வதேச இணைப்புகளினூடாக வலுப்படுத்தலை
நோக்கமாகக் கொண்டு பிரிட்டிஷ் கவுன்சில் GGP-UNICYCLE 2022 என்கிற
செயற்றிட்டத்தை மாணவர்களை மையமாக முன்னெடுத்தது.

பால்நிலை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு, காடாக்கல் மற்றும்
காடழிப்பு சார்ந்த விழிப்புணர்வு,
சேதன விவசாயம் சார்ந்த
விழிப்புணர்வு, பிளாஸ்டிக் மீள் சுழற்சி என்பன இந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்
சி.சிறீசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செயற்றிட்டத்துடன் தொடர்பான ஆவணப்படமொன்றும் ஆற்றுகையொன்றும் செயற்றிட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்