ஊடகவியலாளர் பிக்கீர் சமூகத்தின் அவலங்களுக்கு ஊடகத்தின் வாயிலாக தீர்வை பெற்றுக்கொடுத்தவர் : இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு

நூருல் ஹுதா உமர்

எல்லோருடனும் அன்புடன் பழகும் சரளமாக சகலருடனும் பேசக்கூடிய தன்மை கொண்டிருந்த சகோதரர்  எஸ்.எல்.எம்.பிக்கீர் ஊடகத்துறையில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தவர். ஆசிரியராக, பிரதி அதிபராக தனது தொழிலை கொண்டிருந்தாலும் கூட ஊடகத்துறையில் அதீத ஈடுபாடு கொண்ட ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திய அன்னார் சமூக சேவையிலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஊடகத்தின் வாயிலாக இறக்காமம் பிரதேச மக்களினது மட்டுமின்றி பல பிரதேசங்களினதும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த வரலாறு அவருக்கு இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது அனுதாப செய்தியில் மேலும், அம்பாறை மாவட்டத்தில் ஊடகத்தில் பிரகாசித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இறக்காமத்தை சேர்ந்த சகோதரர் எஸ்.எல்.எம்.பிக்கீர் (வயது 59) இன்று காலை காலமானார் எனும் செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். சகோதரர் பிக்கீர் அவர்களின் இழப்பினால் துயருற்ற குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோருடைய கவலையிலும் நானும் இணைந்து கொள்வதுடன் அன்னாரின் நிறைந்த நல்லமல்களை ஏற்று பாவங்களை மன்னித்து உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க இறைவனிடம் பிராத்திப்பதுடன் அவரின் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை எல்லோருக்கும் வழங்கிட இறைவனை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.