22 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்..

இன்று உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது மனுக்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரிக்கிறது.

“வினிவிந்த பெரமுன”வின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவான் பல்லந்துடாவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, எச்.டி.ஜே குலதுங்க மற்றும் பி.பி. தஹாநாயக்க உள்ளிட்ட ஒன்பது பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.