கோத்தபாயவை போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கை

சி.எல்.சிசில்-

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.


தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான முன்னாள் ஜனாதிபதி யையும் அதற்கு ஆதரவளித்த மக்களையும் போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அதன் தலைவி திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மகஜர் ஒன்றைக் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வவுனியா வில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்