யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று செவ்வாய்க் கிழமை(23) சங்காபிஷேகத்துடன் இடம்பெற்றது..

யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று செவ்வாய்க் கிழமை(23) சங்காபிஷேகத்துடன் இடம்பெற்றது.

இதன் போது ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைவசமயப் பெரியார்களான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மற்றும் சேர்.பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டதுடன் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பரமேஸ்வரா கல்லூரி இயக்குனர் சபையின் ஏற்பாட்டில் வேதாகம பாடசாலையும் ஆரம்பத்து
வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் யாழப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, சேர்.பொன்.இராமநாதனின் வழித்தோன்றல் இராஜேந்திரா தியாகராஜா, செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், பரமேஸ்வரா கல்லூரி இயக்குனர் சபையின் நிர்வாகிகள், சமயப்பெரியார்கள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்