அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 23/8/2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வேல்ட்விஷன் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் ரில்கோ  ஹேட்டலில் இடம் பெற்றது..

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 23/8/2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வேல்ட்விஷன் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் ரில்கோ  ஹேட்டலில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் கலந்து கொண்டு அனர்த்தம் தொடர்பான உரையாற்றினார்

யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ம.பிரதீபன்  மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா வரவேற்புரையினையை நிகழ்த்தினார்

wold vision திட்ட முகாமையாளர் ஏ.ஜி.றொசைறோ நிதி அனுசரணையாளர் உரையினையும் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய கல்வி விழிப்பூட்டல் பிரிவு பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க செயலமர்வின் நோக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கினர்

இந்த நிகழ்வில் இலங்கையின் அனர்த்த அபாய குறிப்பு முறையின் சட்ட ஏற்பாடு எனும் தலைப்பில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய கல்வி விழிப்பூட்டல் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்கவும்

யாழ் மாவட்டத்தின் பிரதான இடர்களும் முன்னேற்பாடுகளும் எனும் தலைப்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராசாவும்

காலநிலை மாற்றத்துடன் கூடிய அனர்த்தங்கள் எனும் தலைப்பில்

வளிமண்டலவியல் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி டீ.பெர்ணாண்டோவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்த நிலத்தடி நீர் தேக்கமும் வெள்ளக் கட்டுப்பாடும் எனும் தலைப்பில் நீர்ப்பாசனத் திணைக்கள சுஜீவன் எந்திரியும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் பொறுப்புக்களும்

எனும் தலைப்பில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜானக்க கண்டுபதிராஜாவும் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்