நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு-பேக்கரி உரிமையாளர் சங்கம்..

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரிப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.