யாழ்.-கொழும்பு ரயில் பயண நேரத்தை 1 மணித்தியாலத்தால் குறைக்கும் முயற்சி

சி.எல்.சிசில்-

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.


யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவர், வடமாகாண போக்குவரத்து சேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சரக்கு போக்குவரத்து ரயிலை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு டொலர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், பயணிகளுக்கு சில விசேட நிவாரணங்கள் வழங்கப்படும் என்றார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், யாழ். இரவு விரைவு ரயில், யாழ்ப்பாண இரவு தபால் புகையிரதம் மற்றும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை பயணிக்கும் ‘கிளி தேவி’ ஆகிய மூன்று புகையிரத சேவைகளை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.