நுரைச்சோலை முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் விரைவில் சீர்செய்யப்படும்….

லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலைய வளாகத்தின் முதலாவது அலகானது, நுரைச்சோலையில், பழுதுபார்க்கப்பட்ட பின்னர் வார இறுதியில் மீண்டும் செயற்படத் தொடங்கும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி ஆலையின் முதல் அலகில் தொழில்நுட்பப் கோளாறு ஏற்பட்டதால், நுரைச்சோலையில் இருந்து கிட்டத்தட்ட 300 மெகாவாட் இழப்பை ஈடுசெய்வதற்காக, இலங்கை மின்சார சபை நீர்மின்சாரத்தை அதிகம் நம்பியிருக்க வேண்டியிருந்ததுடன், மின்சாரத் தடையை நீடித்தது.

தற்போதைய நிலக்கரி இருப்பு அக்டோபர் இறுதிக்குள் போதுமானதாக இருக்கும் என பொறியாளர் கணித்துள்ளார். “நாங்கள் சிக்கலைக் கண்டுபிடித்துவிட்டோம், அடுத்த வாரத்திற்குள், அதை தேசிய கட்டத்துடன் இணைப்போம்; வார இறுதியில் சோதனை ஓட்டம் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்த பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டாவது நுரைச்சோலை அலகு நவம்பர் மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கும். வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் தனிமைப்படுத்தல் காரணமாக, திட்டமிடப்பட்ட பராமரிப்பு தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.