தென்கிழக்கு பல்கலையில் (ICST 2022) 2 வது சர்வதேச ஆய்வரங்கு!

நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் “தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான 2 வது சர்வதேச ஆய்வரங்கு (ICST 2022), தொழில்நுட்ப பீட கேட்போர் கூடத்தில் இன்று (24) நிகழ்வின் இணைப்பாளர் ஆர்.கே.ஏ.ஆர். காரியப்பரின் வழிகாட்டலில் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் குறித்த 2 வது சர்வதேச ஆய்வரங்கின் பிரதான உரையை தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான எம்.எம்.எம். நாஜீம் நிகழ்த்தினார். அத்துடன் நிகழ்வில் விருந்தினருக்கான உரையை கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கே.பீ.ஹேவா கமகே அவர்கள் நிகழ்த்தினார்.
இணையத்தினூடாகவும் நேரலையாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், உயிர் முறைமைப் பிரிவின் தலைவர் கலாநிதி முனீப்.எம்.முஸ்தபா, தகவல் தொழிநுட்ப பிரிவின் தலைவர் கே.முகம்மட் றிfப்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆய்வரங்கில் 38 ஆய்வுக் கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்