அம்பாறை மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கிய கிழக்கின் ஆளுநர்!

பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொதுமக்கள் சந்திப்பு இன்று (24) அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பதிடம் முன்வைத்திருந்தர்.
இதன்போது, சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்ட அதேவேளை, ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி அதுதொடர்பிலான நடவடிக்கையினை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளருக்கு பணிப்புரை வழங்கி வைத்தார்.
இன்றைய தினம் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் தீர்த்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.