கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறை கையாளப்படுகின்றது… (பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கண்டனம்)

(சுமன்)

தமிழ்; முஸ்லீம் உறவு ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான நடைமுறைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். ஏனெனில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறையைக் கையாள்வது கசப்பான விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் இணையத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு அம்பறை மாவட்டத்தில் 19  பிரதேச செயலகங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலே தொடர்ச்சியாகத் தமிழர்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் அதிகார நிருவாக நடைமுறையை முடக்குவதுமான நடவடிக்கைகளை முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்;டவர்களும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனூடாக இன்று அம்பாறை மாவவட்டத்திலே பல தமிழக் கிராமங்கள் அழிவுற்ற கிராமங்களாக இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திராய்க்கேணி, அட்டப்பளம், நிந்தவூர், ஆளங்குளம், மீனோடைக்கட்டு, பொத்துவில்லில் பல பகுதிகள் உட்பட பல பிரதேசங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது பழம்பெரும் கிராமங்கள் பலவற்றின் பெயர்கiளைக் கூட நீக்குகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்துப் பல நகர்வுகளை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்முனை வடக்குப் பிரதேசத்தின் காணிப்பதிவு அலுவலகம் நீக்கப்பட்டது. இது தொடர்பில் தற்போதை நாட்டின் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு நாங்கள் இதனைக் கொண்டு சென்றோம். அவர் பிரதமராக இருக்கும் போது நாங்கள் நேரடியாகச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறியபோது தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இற்றைவரைக்கும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு 33  வருடங்களாக இயங்கி வந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முடக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக காணிப் பதிவு அலுவலகம் மாற்றப்பட்டது அதன் அடுத்தபடியாக தற்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கப் பிரதேச செயலகத்துடன் 20 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்ட விடயம் தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு 19 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களை முற்றாகத் துடைத்தெறிகின்ற செயற்பாடுகளில் முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், அரசியலல்வாதிகளும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற உண்;மை மேலும் நிரூபணமாகின்றது.

குறிப்பாகத் தமிழ்; முஸ்லீம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் கூறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான வார்த்தைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை.

கல்முனை வடக்கை மையப்படுத்தி முஸ்லீம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்டுகின்ற செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே பாரியதொரு பிரிவினையையே ஏற்படுத்தும். எந்த அரசாங்கம் அமைந்தாலும் ஒரு கொள்கையற்ற ரீதியில் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களை இல்லாதொழிக்கின்ற வரலாறே இருந்து கொண்டிருக்கின்றது.

1990களிலே அரச படைகளுடன் சேர்ந்து எமது மக்களை அழித்த வரலாறுகள் உண்டு. இவ்வாறான கடந்த கால வடுக்களை எல்லாம் மறந்து எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழர்கள் இருந்தாலும், சில முஸ்லீம் அரசில்வாதிகளிடம் அவ்வாறான சிந்தனைகள் இல்லை. மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கையாளுகின்ற தன்மையே அவர்களிடம் இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகவே கல்முனையில் நடக்கின்ற விடயங்கள் இருக்கின்றன.

இந்த விடயத்தில்; அரசாங்கம் மௌனம் காப்பதும், முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறையைக் கையாள்வதும் ஒரு வேடிக்கையானதும், கசப்பானதுமான விடயமாகும். பொது நிருவாகத்திற்குப் பொறுப்பாகப் பிரதமர் இருக்கின்ற போதும், காணிப்பதிவகம் பிரதமர் வசமிருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நீதிக்கு முறனாக இடம்பெறுவது வேடிக்கையானது.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற இந்தக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் நிருவாக நடைமுறைகளைக் குழப்புகின்ற வேலைகள் கட்டம் கட்டமாக கையூட்டல்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது உரிய அமைச்சருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்படுகின்றதா? என்கின்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. ஏனெனில் ஒரு அமைச்சரiவையில எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை இன்னுமொரு அமைச்சரவைத் தீர்மானத்தினூடகவே வலுவிழக்கச் செய்ய முடியும். ஆனால் கல்முனையைப் பொருத்தவரையில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லை. அவர்கள் நினைத்தபடி கல்முனை வடக்குப் பிரதேசத்தைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளும் மேற்கொள்வது மனவேதனையானதும், கண்டிக்கப்படுகின்றதுமான விடயம். இவ்வாhன நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் இந்த இரண்டு இனங்களும் பாதுகாக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்வரும் 29ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்போது உரிய அமைச்சர், திணைக்களம் என்பவற்றுடன் கலந்துரையாடி இதற்குரிய விரைவு நடவடிக்கைளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.