கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக (Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக ( Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி டி.ஜி.எம். கொஸ்டா ( D.G.M. Costa    ) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து இன்று 24 புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

அத்தோடு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமனம் பெற்று இடமாற்றம் செல்லும் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபீக்குக்கான விடுவித்தல் கடிதத்தையும் இதன் போது மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.