மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?அமைச்சர் வெளிப்படுத்துகிறார்..

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது , எரிபொருளை இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாமதமாக பணம் செலுத்துவதால் எரிபொருள் வரிசைகள் மீண்டும் உருவாக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

 

போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் , திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதையும் காணமுடிகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.