மன்னாரில் கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று மன் /உயிர்த்தராசன்குளம் றோ.க .த.க பாடசாலை (முருங்கன் ,மன்னார் ) தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான 41 மாணவர்களுக்குஇணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இக் கற்றல் உபகரணங்களை இணைந்த கரங்களின் இணைப்பாளர் விவேகானந்தன் வழங்கி வைத்தார்

மாவட்ட இணைப்பாளர் விவேகானந்தன் கூறுகையில்

எங்களுடைய இந்த இணைந்த கரங்கள் அமைப்பானது மிகவும் கஸ்டப்பட்ட கிராமத்தில் வாழ்கின்ற கல்வி கற்று வருகின்ற வறிய மாணவ செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாது சகல பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கும் இச் சேவையினை வழங்கி வருகின்றோம் இதை எண்ணி பெருமிதம் கொள்கிறது எமது இணைந்த கரங்கள் அமைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பானது குறுகிய காலத்தில் இத் திட்டத்தினை ஆரம்பித்து சுமார் 4 மாத காலத்தில் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.