ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி!

2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்ய அதிபர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இணையம் ஊடாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கமைய 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அவர்களில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

விண்ணப்பித்த 49 பேரின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்