16 இலட்சம் அரச ஊழியர்களில் 10 இலட்சம் பேர் சரியாக வேலை செய்வதில்லை – அமைச்சர் ரொஷான் கருத்து

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிகையில் :

அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும். அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வேண்டும். அரசுப் பணியில் 16 இலட்சம் பேர் உள்ளனர். இந்த 16 இலட்சம் பேரில் 6 இலட்சம் பேர் தங்கள் சேவையை நேர்மையாகச் செய்கிறார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். பொதுப்பணித்துறையை குறை கூறுவது அரசு ஊழியர்கள்தான். அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் உறுதிமொழி எடுத்தால் நேர்மையாக சேவை செய்தால் மக்கள் பிரச்சினைகள் விரைவாக தீரும் என்றார் ‘

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்