முட்டையை 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய அனுமதி

ஒரு முட்டையை 50.00 ரூபாவுக்கு விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) பரிந்துரைத்துள்ளார்.

சமீபத்தில், ஒரு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்து அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சந்தையில் இன்னும் ஒரு முட்டை ரூ.60 க்கு மேல் விற்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்