சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி – சஜித் பிரேமதாச

சர்வகட்சி அரசாங்கம் பொய்யான விடயமெனவும், இதன்மூலம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்குமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அதிபர் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை தூற்றினாலும், இன்று நாட்டையே தூற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளை ஏற்க மாட்டோம்

சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி - சஜித் பிரேமதாச | All Party Government Sajith Press

சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளி. இவ்வாறு கூறும் அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுகின்றது.

 

தற்போதைய தேவை பதவிகளை பகிர்ந்து கொள்வதல்ல. ஒருபோதும் திருடர்களுடன் சேர்ந்து நாம் அமைச்சர் பதவிகளை ஏற்க மாட்டோம். ஆனால் அரசாங்கம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது அதற்கு ஆதரவளிப்போம்.

தேங்காய் எண்ணெய், சீனி, பூண்டு மோசடிகள் மட்டுமன்றி கழிவுப்பொருள் கப்பலுக்கு பணம் கொடுத்த மோசடிகளையும் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும். அதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.