கோதுமை மா தட்டுப்பாட்டால் பாண் விலை 300 ரூபா வரை உயரும்

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 13,500 ரூபாவாகவிருந்த 50 கிலோ கிராம் கோதுமை மா கறுப்புச் சந்தையில் 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்களான பிரிமா மற்றும் செரன்டிப் ஆகியவை தற்போது கோதுமை மா தேவையில் 25 சதவீதத்தை சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொடர்புடைய 2 நிறுவனங்கள் தேவையான முழு அளவிலான கோதுமை மாவையும் வழங்க முடியும் என்றும், டொலர் பற்றாக்குறையால், தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது கோதுமை மா தேவையின் ஒரு பகுதியை மட்டுமே வழங்குவதாகவும் தெரிவித்தார்.

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் கறுப்புச் சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 13,500 ஆக இருந்த 50 கிலோகிராம் கோதுமை மா சந்தையில் 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் பாண் ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கப்படுமெனவும் சந்தையில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுமார் 200 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்