பின்னவல சரணாலயத்தில் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்!

 

  

பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக் குட்டிகளான திசா மற்றும் சஜ்ஜனாவின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இடம்பெற்றன.

விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேம காந்த தலைமையில் இந்த பிறந்தநாள் நிகழ்வை உதவிப் பணிப்பாளர்களான நவோத் அபேசிங்க மற்றும் மிஹிரன் மெதேவல ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் .

இந்நிகழ்வில் மத வழிபாடுகளும் இடம்பெற்றன
பின்னர், விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமா காந்தா, விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இரண்டு யானை இரட்டையர்களுக்கும், இரட்டை யானைகளின் தாயான சுரங்கிக்கும் பாலூட்டி உபசரித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.