தேயிலை, இறப்பர், தெங்கு,கறுவா ஏற்றுமதி மூலம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்

கடந்த வருடம் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தேயிலையின் ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உரத் தட்டுப்பாட்டால் ஏற்றுமதி பயிர்த் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேயிலை தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை விவசாயிகள் தற்போது பெற்றுள்ளதாகவும், அதன்படி, ஒரு கிலோ தேயிலை விலை 2019 டிசம்பரில் காலி மாவட்டத்தில் ரூபா 80 முதல் 85 வரை இருந்த விலை தற்போது ரூ.250 மற்றும் 290 ஆக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கிலோ தேயிலை ரூ. 410, இதுவே ஒரு கிலோ தேயிலைக்கு கிடைத்த அதிகபட்ச விலையாகும்.

தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தரமான தேயிலை பறித்தல் மற்றும் உற்பத்தி செயன்முறைகள் குறித்து தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையை நேற்று பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதிக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்காக தேயிலை தொழில்துறை நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கை தேயிலை சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை என்பன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்