ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் சுட்டுக் கொலை

கேகாலை களுகல்ல மாவத்தையில் இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை ஹபுதுவல பிரதேசத்தில் வசிக்கும் பெண் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரை இன்று காலை அவரது வீட்டிலிருந்து தேர்தல் அமைப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது வேறு யாரேனும் சுட்டுக் கொண்டார்களா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்