10 இல் 3 இலங்கையர்களின் உணவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை!

 

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் அல்லது 10 இலங்கையர்களில் மூன்று பேர் இன்று உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் குறைவான சத்துள்ள உணவை உட்கொள்வது அல்லது சமாளிக்கும் பொறிமுறையை நாடுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு உதவி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, பயிர் விளைச்சல் குறைதல், உக்ரைனில் போர் என்பவற்றால், நாடு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் உணவு உதவி 3.4 மில்லியன் மக்களைச் சென்றடைவதை நோக்கத்தின் அடிப்படையில் நெருக்கடிக்கு பதிலளிக்க 63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கிய உதவித் திட்டங்களில் திரிபோஷாவும் அடங்கும் என்பதை உலக உணவுத் திட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.