வாய்ப்பு நழுவிவிட்டது, மீண்டும் பெரமுன ஆட்சியே அமையப் போகிறது – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய   வாய்ப்பில்லை என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்மொழிந்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை. இந்த நிலையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை இனியும் ஒத்திவைக்க முடியாது , எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஸ்திரமான அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைக்க வேண்டும் இதன் மூலம் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்ததற்கு டீலோ அல்லது வழக்குகளில் இருந்து தப்பிக்கவோ காரணம் அல்ல என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்றும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் அனுபவம் அதிகம், சர்வதேச சமூகத்தை கையாள்வதில் அவருக்கு இருந்த முதிர்ச்சி மிகவும் முக்கியமானது என்றும் நாமல் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.