வாகன திருத்தும் இடத்தில் கடிதத்துடன் கைவிடப்பட்ட ஒரு மாத கைக்குழந்தை: பண்டாரவளையில் சம்பவம்

பண்டாரவளையில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் அருகில் நேற்று ஒரு மாத கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டாரவளை அம்பேவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் இந்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் இந்த சிசு வளாகத்தில் விடப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் குழந்தையை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

ஒரு பெண் பொலிஸ் அதிகாரி குழந்தையை கவனித்துக் கொள்ளவும், உணவளிக்கவும் முன்வந்தார்.

கைக்குழந்தையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது, மேலும் குழந்தையை குறித்த இடத்தில் விட்டுச் சென்றவர் சிறிது நேரத்தில் மீண்டும் குழந்தையை எடுத்துச் செல்வதாகவும் அதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை தொடர்பில் பரிசோதிப்பதற்காக சிசு தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிசுவை கைவிட்டுச் சென்ற சந்தேக நபரைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.