எரிபொருள், எரிவாயு, நெல் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் – சாகல ரத்நாயக்க

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எரிபொருள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கி, அதனை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரிசி விலை உயர்வு மற்றும் நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

நெல் கொள்முதல் செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்கள் மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

நெல் கொள்வனவுகளை துரிதப்படுத்துமாறும் நெல் களஞ்சியசாலைகளை மேம்படுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய எரிவாயு நெருக்கடி தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், எரிவாயு கொள்முதல், இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்