இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்கும் நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் அழைப்பு

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி வலியுறுத்தியுள்ளார்.

“சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம் என சுசுகி செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான வழியை இலங்கை தேடும் நிலையில், சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பூர்வாங்க உடன்படிக்கையை எட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்