இலவச ஆங்கில பாட நெறியை கற்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல்.

இளைஞர் யுவதிகளிடையே ஆங்கில மொழி புலமையை விருத்தி செய்வதற்காக இந்து பொளத்த கலாச்சார பேரவையினால் இலவச ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக இலவச ஆங்கில பாடநெறி யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களையும் இணைக்கும் வகையில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

குறித்த ஆங்கில வகுப்புகள் கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்களுக்கு யாழில் உள்ள வட மாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் அலுவலகத்தில் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் கலந்துகொண்டதுடன் ஆங்கிலபாட ஆசிரியர் ம.சுமெஷனும் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்