இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது.அன்றைய தினத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது.இதன் போது இலங்கை இதுவரை என செய்தது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ,அலுவலகம் ஒன்றை நிறுவியதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.இந்த நிலையில் நாட்டு நிலைமை மோசமடைந்துள்ளது.இதனால் இம்முறை அமர்வு இன்னும் மோசமாக அமையும் என நம்பப்படுகிறது.

ஆனாலும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை காரணம் காட்டி இன்னும் கால அவகாசம் தாருங்கள் என்று அரசு கேட்கவுள்ளது.ஆகவே பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு அரசு தயாராகி வருகிறது.

ஆனால் சர்வதேசத்தின் முன் இலங்கை நிறுத்தப்பட வேண்டும் என பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இது தவிர ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லாம் இலங்கை அரசுக்கு எதிராவே காணப்படுகிறது.

அத்துடன் ரணில் ஜனாதிபதியாக தற்போது இருந்தாலும்,வெளிவிகாரம் இன்னும் மாற்றப்படவில்லை.

இதனால் சீன ஆதிக்கம்,அமெரிக்க ஆதிக்கம்,இந்திய ஆதிக்கம் என பல பிரச்சினைகள் உள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசு சீனாவில் இருந்து .வெளிவிகார கொள்கையில் இருந்து வெளியே வந்தால்,இலங்கை அரசை ஏனைய நாடுகள் காப்பாற்றும் நிலை வரும்.

இது விடுத்தது சீனாவிடம் கடன்களை பெறுதல் வசதிகளை ஏறபடுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களை இலங்கை தொடர்ந்தும் செய்யுமானால் இந்து சமுத்திரத்தை போர் சூழல் வைத்திருக்கும் நிலைமைகளை இலங்கையே ஏற்படுத்திக்கொடுத்தது போல் ஆகிவிடும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்