அனுமதிப் பத்திரத்தில் மோசடி- 8 டிப்பர்கள் தடுத்து வைப்பு- எண்மர் கைது!!

 

அனுமதிப் பத்திரத்தில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களைத் தடுத்து வைத்துள்ளதோடு சாரதிகள் எண்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். கைதடி ஏ9 வீதியில் பயணித்த குறித்த டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் இன்று காலையில் சோதனையிட்டபோதே இந்த மோசடி தெரிய வந்தது.

அதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சாரதிகளை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்