தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்