பாராளுமன்றத்திற்கு இடையிலான ஒன்றிய செயலாளர் நாயகம், பிரதமர் சந்திப்பு

பாராளுமன்றத்திற்கு இடையிலான ஒன்றிய செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் மற்றும் சிரேஷ்ட வேலைத்திட்ட அதிகாரி லோரன்ஸ் மார்சல் ஆகியோர் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினர்.

பொதுமக்களின் பங்களிப்பை உள்ளடக்கிய மிகவும் சக்திவாய்ந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதன் மூலம் பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விரிவாக இதன் போது விளக்கினார்.

கொள்கை வழிகாட்டல் மற்றும் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக சபையின் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் தேசிய சபையை உருவாக்குவது தொடர்பான உடன்பாடு குறித்தும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவது முக்கியம் என்பதால் இலங்கை பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவதாகவும் IPU தூதுக்குழுவிடம் பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பொதுச்செயலாளர் பாராட்டினார். தேசிய விவாதத்தில் இளைஞர்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் அவர்களின் ஈடுபாட்டையும் அவர் எடுத்துரைத்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக அரசியலிலும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களிலும் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுங்கோங் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.