ரயிலுடன் வேன்மோதி விபத்து; சாரதி பலி

அம்பலாங்கொடை, வேனமுல்ல புகையிரத கடவை ஊடாக பயணித்த வேன் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் வேனின் சாரதி (வயது 67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது .

குறித்த புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞை  நீண்ட காலமாக செயலிழந்துள்ளதாக   பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்