நாட்டை ஆள்வது ரணில்! ரணிலை ஆள்வது ராஜபக்க்ஷ – நளின் பண்டார

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகளாக அங்கீகரிக்கப்பட்ட ராஜபக்சக்களால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நாட்டை ரணில் ஆள்கிறார். ரணில் ராஜபக்ஷக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார். இவ்வாறான பின்னணியில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் தீர்த்து வைப்பார் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்