ரணிலுக்கு ஏனைய நாடுகள் பயப்படுகின்றன – வஜிர அபேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான பொருளாதார இலக்கை பார்த்து ஏனைய நாடுகள் பயப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் இப்போது அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கிடையே நிலவும் அதிகாரப் போட்டிகள் நாட்டை அதல பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளன. தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவம் இப்போது எங்களிடம் உள்ளது. ஏனைய நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவை கண்டு அஞ்சுகின்றன, ஏனெனில் அவர் நாட்டை மேலும் உயரத்திற்கு புத்துயிர் அளிப்பார் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

எனவே உலக நாடுகளுடன் போராடக்கூடிய ஒரு தலைவர் தற்போது எமது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.