கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமராகநியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதே கட்சியின் மற்றொரு குழு திரு.தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை எனவும், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்