கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேர அட்டவணையில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இதன்படி தாமரை கோபுரம் நாளை முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

 

அத்தோடு வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தாமரை கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் நெலும் குளுன என அழைக்கப்படும் பகுதிகள் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

கொழும்பில் தாமரை கோபுரம் திறக்கப்பட்ட முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.