அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு எதிர்ப்பு அலை உருவாகக் கூடும்

நாடு முழுவதும் மகா சங்கத்தினரும், மதகுருமார்களும் மின்சாரக் கட்டணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் அது மீண்டும் ஒரு எதிர்ப்பு அலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ர ஆராச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
நாடு முழுவதும் மகா சங்கத்தினரும், மதகுருமார்களும் மின்சாரக் கட்டணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல , பெருமளவான மின்சாரக் கட்டணம் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலை மீண்டும் ஒரு எதிர்ப்பு அலையை ஏற்படுத்தக் கூடும். எனவே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் .

அதே போல நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அரச வங்கிகளில் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு பணம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. எனவே விவசாயிகளின் நெல் அறுவடையை உத்தரவாத விலையில் விரைவாக பெற்றுக் கொள்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்