வனவிலங்கு கள அலுவலர்கள் 23ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உட்பட்ட அனைத்து கள உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.


கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பன வில் நிபந்தனைகளை விதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனால், யானைகளை அகற்றுதல், பூங்காக்களில் சுற்றுலா நடவடிக்கைகள் போன்ற பிற சேவைகள் செயற்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்