சுற்றிவளைப்பு ஆரம்பம் – மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக சில மருந்தக உரிமையாளர்கள் மருந்துகளின் விலையில் மாற்றம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அது தொடர்பில், மருந்தகங்களை ஏற்கனவே சோதனையிட ஆரம்பித்துள்ளதுடன், ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் பதுளை பிரதேசங்களில் நேற்று (19) மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்