ரயிலுடன் கார் மோதி விபத்து !

களனிவெளி புகையிரத பாதையில் பகிரிவத்தை, தெல்கந்த நிலையத்திற்கு அருகில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் கடவையை கடக்கும்போது கார் ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களனிவெளி ரயில் பாதையின் ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்