யுனெஸ்கோ தலைவரை சந்தித்து இலங்கைக்கு உதவி கேட்டார் சுசில்!

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார்.
இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மேலும் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான நிலைமைகளை விளக்கிய அமைச்சர் யுனெஸ்கோ ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்