10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசியா உறுதி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

மலேசிய மனிதவள அமைச்சர் நேற்று (21) வெளியிட்ட அறிக்கையில், 10,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

செப்டம்பர் 14 அன்று நடந்த மலேசிய அமைச்சரவை கூட்டத்தில், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவ புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்