04 புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்

-சி.எல்.சிசில்-

மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளு மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த நியமனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (20) குழு அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இதன்படி, ஜப்பானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ரொட்னி மனோரஞ்சன் பெரேராவை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளராகவும், பி.எச்.சி. ரத்நாயக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராகவும், எஸ். ஹெட்டியாராச்சி பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் தலைவராக எல்.எச்.ரஞ்சித் சேபால, லங்கா மின்சார கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (LECO) தலைவராக அதுல பிரியதர்ஷன டி சில்வா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவராக நிஷாந்த ரணதுங்க ஆகியோரின் நியமனங்களுக்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்