டீசல் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக இலங்கையில் தரித்து நிற்கும் டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் 07 ஆம் திகதி குறித்த டீசல் கப்பல் 41​,000 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்தது.

குறித்த டீசல் கப்பலுக்கான பணத்தை கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இறக்கும் பணி தடைப்பட்டு இருந்தது.

தரையிறக்கும் பணிகள்

டீசல் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு | Sri Lanka Makes Payment For Fuel Ship Fuel Crisis

இந்நிலையில், இந்த கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொள்வனவு செய்யப்பட்ட கப்பலிலிருந்து தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் மேலும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்